பதிவு செய்த நாள்
12
மே
2022
10:05
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அமைதிநகர் மதுரைவீரன் கோவில் திருவிழாவில், நேற்று திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது.பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி அமைதி நகர் மதுரைவீரன் கோவில் திருவிழா, கடந்த, 8ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் சப்பர ஊர்வலம் நடந்தது.நேற்று, மதுரைவீரன், பொம்மியம்மன், வெள்ளையம்மன் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் சார்பில், திருமாங்கல்யம், மாலைகள், பட்டாடைகள் உள்ளிட்ட, 25 வகையான சீர்வரிசைகள் சுவாமிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. வேத மந்திரங்கள் முழங்க, மதுரைவீரன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவில், நகராட்சி தலைவர் சியாமளா, துணைத்தலைவர் கவுதமன், முன்னாள் நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.