கோவை : புலியகுளம் பெரியார்நகர் பகுதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில், 39ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்து வருகிறது.கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதை தொடர்ந்து பூச்சாட்டு, அக்னி சாட்டு, திருவிளக்கு பூஜை, தீர்த்த குடம் எடுத்தல் மற்றும் அம்மனுக்கு திருக்கல்யாணம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தன.நேற்று விழாவின் சிறப்பு நிகழ்வாக, சக்தி அழைத்தல் மற்றும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில் பல பெண்கள் அம்மன் வேடமிட்டு, வீதி உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருளை பெற்றனர்.