மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2022 11:05
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நடைபெற்ற சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்தினர்.
கர்நாடக இசைக் கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் உள்ளிட்ட 5 இடங்களில் ஒரே நேரத்தில் ஜோதி ரூபமாக ஜீவசமாதி அடைந்துள்ளார்.இதனை கொண்டாடும் விதத்தில் வருடந்தோறும் மேற்பட்ட 5 இடங்களிலும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான ஆராதனை விழா நேற்று முன்தினம் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் துவங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்ற வாய்ப்பாட்டு, வயலின்,வீணை,புல்லாங்குழல், மாண்டலின் இசைக் கச்சேரிகளும் மாலை பாராட்டு விழாவும் நடைபெற்றது.நேற்று காலை 9:00 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் புள்ள சதாசிவ பிரம்மேந்திராள் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன இதனைத் தொடர்ந்து குரு அஞ்சலி,கோஷ்டி கானம், வடுக பூஜை,கன்யா பூஜை,சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.