புவனகிரி : புவனகிரியில் ஆர்ய வைஸ்ய மகாசபை சார்பில், கன்னிகாபரமேஸ்வரி அம்மன் ஜெயந்தி உற்சவம் மற்றும் 102 கேந்திர பூஜை நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 6.30 மணிக்கு வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த கலசம் ஊர்வலமாக எடுத்து வந்து, கன்னிகாபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து 102 கோத்திரபூஜை நடந்தது. அம்மன், விநாயகர் மற்றும் முருகன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 6.00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு புஷ்பாபிேஷம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.ஆர்ய வைஸ்யர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா குழு தலைவர் சுந்தரேசன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.