பதிவு செய்த நாள்
12
மே
2022
04:05
வால்பாறை : வால்பாறை, முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் புனித தீர்த்தம் எடுத்து சென்றனர்.வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், 35ம் ஆண்டு திருவிழா, கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை, பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். இன்று நடுமலை ஆற்றிலிருந்து, பக்தர்கள் சக்தி கும்பம் எடுத்து வழிபடுகின்றனர். அதன்பின், காலை, 11:00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. நாளை, 13ம் தேதி மாலை பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 15ம் தேதி வரை தினமும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.