பதிவு செய்த நாள்
20
மே
2022
05:05
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே மேலப்பண்ணைக்குளம் கிராமத்தில் ஆயிரவள்ளி அம்மன், முனியப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதனை முன்னிட்டு மே 18 தேதி காலை 7 மணிக்கு அனுக்ஞை,மகா கணபதி பூஜை, நவக்கிரஹ,கணபதி ஹோமம்,பூர்ணாஹூதி,கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம்,முதல் கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது.மே 19 தேதி இரணடாம், மூன்றாம் கால யாகபூஜை, மந்திர ஸ்தாபனம் நடந்தது. பின்பு இன்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜை,கோ பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாரதனை நடந்தது.கருட வாகன புறப்பாட்டுக்கு பின்பு கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.மூலவரான ஆயிரவள்ளி அம்மனுக்கு பால்,சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகம்,சிறப்புபூஜைகள் நடந்தது. மேலப்பண்ணைக்குளம் கிராமமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்தூர், கமுதி சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.