சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் பெரியபாலம் கொக்கன் கருப்பர் கோயில் கோடை பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கோயில் முன்பாக பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கொக்கன் கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் படையல் போடப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அ.காளாப்பூர் கிராமத்தார்கள், கோயில் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.