பதிவு செய்த நாள்
02
ஜூன்
2022
06:06
உடுமலை : உடுமலை அருகேயுள்ள சின்னபொம்மன் சாளை, ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
விழாவையொட்டி, கொடுமுடி, கோடந்துார், தெய்வ குளம், திருமூர்த்திமலை, மீன் குளத்தி பகவதியம்மன், வனபத்ரகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய தலங்களிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி, வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடந்தன.நேற்று காலை, 8:00 மணிக்கு, அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம், மதியம், 3:00 மணிக்கு, பூவோடு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், சின்னபொம்மன்சாளை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டனர்.