பல்லடம்: பல்லடம் அருகே, மாரியம்மன் மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா கோலாகலமாக நடந்தது. பல்லடம் அடுத்த, கே.அய்யம்பாளையத்தில் உள்ள ஸ்ரீவிநாயகர், மாரியம்மன் மாகாளியம்மன் கோவில் பல்வேறு கிராம மக்களுக்கு குல தெய்வமாக உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு உங்கள் பூச்சாட்டு விழா மே 26 அன்று ஊர் சுற்றி சோறு எரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
மே 28 அன்று அம்மனுக்கு கம்பம் நடுதல், கம்பம் சுற்றி ஆடுதல், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. நேற்று காலை, 3.00 மணிக்கு மாவிளக்கு, மற்றும் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. தொடர்ந்து, கிடா வெட்டுதல், கம்பம் எடுத்து கங்கையில் விடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்துடன் மாரியம்மன், மாகாளியம்மன், மற்றும் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.