பதிவு செய்த நாள்
08
ஜூன்
2022
12:06
போத்தனூர்: போத்தனூர் அடுத்த மேட்டூரிலுள்ள மாகாளியம்மன் கோவில் விழா, 31ல் பிள்ளையார் வேள்வியுடன் துவங்கியது. இரவு பூச்சாட்டுதல் நடந்தது. தொடர்ந்து மறுநாள் முதல் நேற்று முன்தினம் வரை கம்பம் சுற்றி ஆடுதல், சிறப்பு வழிபாடு நடந்தன.
நேற்று இரவு அம்மன் திருக்கல்யாணம், கரகம் முத்தரித்து வர மூரண்டம்மன் கோவிலுக்கு செல்லுதல் உள்ளிட்டவை நடந்தன. இன்று அதிகாலை மூரண்டம்மன் கோவிலிலிருந்து கரகம் அழைத்து வருதலும் தொடர்ந்து பொங்கல் வைத்தலும் நடக்கின்றன. மாலை மாவிளக்கு ஊர்வலம் அழைத்து வருதல் நடக்கிறது. நாளை மாலை திருவள்ளுவர் ஒயிலாட்ட குழுவின் ஒயிலாட்டம் தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வருதலும் நடக்கின்றன. நிறைவு நாளான, 10, காலை,9:00 மணிக்கு அபிஷேக பூஜை, மதியம் அலங்கார பூஜை, அன்னதானம் மாலை, 4:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடக்கின்றன. அதுபோல் சுந்தராபுரம் அடுத்து சாரதா மில் லைனிலுள்ள மாரியம்மன் கோவில், 74வது ஆண்டு திருவிழா கடந்த, 1ல் முளைப்பாரி இடுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், கங்கனம் கட்டுதல் , கொடியேற்றுதல், இரவு பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நடந்தன. நேற்று இரவு அம்மை அழைத்தல், அம்மன் திருக்கல்யாணம், அன்னதானம் வழங்குதலும் நடந்தன. இன்று காலை குறிச்சி பொங்காளியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரக ஊர்வலம் புறப்பட்டு கோவிலை சென்றடைகிறது. மதியம் அபிஷேக பூஜை, மாலை மாவிளக்கு பூஜை, முளைப்பாரி பூஜையும் நடக்கின்றன. இரவு கம்பம் எடுத்தல் நடக்கிறது. நாளை மாலை மஞ்சள் நீர் உற்சவம், இரவு மகா அபிஷேக பூஜையும் நடக்கின்றன. நிறைவு நாளான, 10 மதியம் பூஜை, அன்னதானம் வழங்குதல் நடக்கின்றன.