Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ரிஷபம் : ஆனி மாத பலன் கடகம் : ஆனி மாத பலன் கடகம் : ஆனி மாத பலன்
முதல் பக்கம் » ஆவணி மாத பலன் (17.8.2022 முதல் 17.9.2022 வரை)
மிதுனம் : ஆனி மாத பலன்
எழுத்தின் அளவு:
மிதுனம் : ஆனி மாத பலன்

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2022
09:49

மிருகசீரிடம் - 3, 4: அனைவரையும் சரிசமமாக மதிக்கும் உங்களுக்கு இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ராசியாதிபதி புதன் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். அதே வேலையில் திட்டமிடாத செயல்களால் வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. மேலிடம் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு கேட்பது சிறந்தது. சக பணியாளர்களிடம் மேலிடம் பற்றி குறை கூறாமல் இருப்பது நல்லது. குடும்ப நிம்மதி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உறவினர்கள் வகையில் வீண் கருத்து மோதல்கள் ஏற்படலாம். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். கலைத்துறையினருக்கு வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியலில் உள்ளவர்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் வேகம் உண்டாகும். மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.
பரிகாரம்: மாரியம்மனை வணங்க எல்லா பிரச்னைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
சந்திராஷ்டம தினம்: ஜூன் 16, 17, ஜூலை 14
அதிர்ஷ்ட தினம்: ஜூன் 25, 26
**
திருவாதிரை: செயலில் வேகம் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் மனதில் உற்சாகம் ஏற்படும். வீண் பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. கேதுவால் நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் ஸ்தானாதிபதி குரு ஆட்சியாக சஞ்சரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் அகலும். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும் போதும் வாங்கும் போதும் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். பணத்தை கையாளும் போது கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. எடுத்த வேலையை செய்து முடிக்க முடியும். மாணவர்களுக்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.
பரிகாரம்: நடராஜப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்னைகள் தீரும்.
சந்திராஷ்டம தினம்: ஜூன் 17, 18, ஜூலை 15
அதிர்ஷ்ட தினம்: ஜூன் 26, 27

புனர்பூசம் - 1, 2, 3: நேர்மை - புத்தித்தெளிவு கொண்ட உங்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயரும், புகழும் கூடும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். புதியதாக வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். எந்த ஒரு காரியமும் சுலபமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்க எதிர்பார்த்த பணவரவு இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.
சந்திராஷ்டம தினம்: ஜூன் 18, 19, ஜூலை 16
அதிர்ஷ்ட தினம்: ஜூன் 27, 28

 
மேலும் ஆவணி மாத பலன் (17.8.2022 முதல் 17.9.2022 வரை) »
temple news
அசுவினி: எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் உங்களுக்கு இந்த மாதம் கடும் முயற்சிக்கு பிறகு ... மேலும்
 
temple news
கார்த்திகை - 2, 3, 4:பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிக்கும் உங்களுக்கு இந்த மாதம் எதிலும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் - 3, 4:எதற்கும் கலக்கமோ, அதிர்ச்சியோ அடையாத உங்களுக்கு இந்த மாதம் வீண்செலவு குறையும். மனதில் ... மேலும்
 
temple news
புனர்பூசம் - 4:திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெறும் உங்களுக்கு இந்த மாதம் வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் ... மேலும்
 
temple news
மகம்:கடின உழைப்பை கண்டு அஞ்சாத உங்களுக்கு இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். மதிப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar