பதிவு செய்த நாள்
21
ஜூன்
2022
03:06
சென்னை : திருச்சி மாவட்டம், உறையூர், வெக்காளியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில் ஜூலை, 6ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இது குறித்த அறநிலையத்துறை அறிவிப்பு: திருச்சி மாவட்டம், உறையூர், வெக்காளியம்மன் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தது. அப்பணிகள் முடிவுற்ற நிலையில், அனைத்து மண்டபங்கள், ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் ஜூலை, 6ல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, ஜூலை, 1ல் யாகசாலை வளர்க்கப்பட்டு, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமத்தில் இருந்து தொடர்ந்து பல ஹோமங்கள் நடக்கிறது. கும்பாபிஷேக நாளான ஜூலை, 6ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு அங்குரபூஜை, மூலாலய மூர்த்திகளுக்கு ரக்ஷாபந்தனம் நடக்கிறது. காலை, 6:45 மணிக்கு ராஜகோபுரம், விநாயகர் முதலான மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, வெக்காளியம்மன் மூலாலய மூர்த்திக்கு கும்ப நீர் சேர்த்து கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அறநிலையத்துறையின் நலத்திட்டத்தின் கீழ் இக்கோவிலில் தினசரி, 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.இதில் பங்குபெற, 3,500 ரூபாய் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.