பதிவு செய்த நாள்
21
ஜூன்
2022
03:06
சென்னை : தென் மாவட்ட நவக்கிரஹத் திருத்தலங்களை மேம்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:அறநிலையத் துறை சார்பில், புகழ்பெற்ற நவக்கிரஹ கோவில்கள், நவக்கயிலாயக் கோவில்கள், பஞ்ச சபை, சிவபெருமானின் திருவிளையாடல்கள் இடம்பெற்ற, அஷ்ட வீரட்டானத் தலங்கள் ஆகியவற்றுக்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் செய்யப்பட உள்ளன.அதன்படி, பாண்டிய நாட்டு நவக்கிரஹ கோவில்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதைச் செயல்படுத்தும் வகையில், மதுரை முக்தீஸ்வரர் கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில், குருவித்துறை சித்திர ரத வல்லப்பெருமாள் கோவில், கொடிமங்கலம் நாகமலை நாகதீர்த்தம் நாகேஸ்வரர் கோவில்... சங்கரன்கோவில் பால்வண்ண நாதர் கோவில், சிவகங்கை மாவட்டம் வேம்பத்துார் கைலாசநாதர் கோவில், தேனி மாவட்டம் குச்சனுார் சுயம்பு சனிபகவான் கோவில், உத்தமபாளையம், திருக்காளத்தீஸ்வரர் கோவில், மானாமதுரை சோமநாதசுவாமி கோவில் ஆகிய நவக்கிரஹத் தலங்களில், புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டம், குச்சனுார் சுயம்பு சனிபகவான் கோவிலில், நவக்கிரஹத் சன்னிதிகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர்கூறியுள்ளார்.