தஞ்சாவூர் 13 பெருமாள் கோயில்களில் வெண்ணெய்த்தாழி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2022 03:06
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் 13 பெருமாள் கோயில்களின் வெண்ணெய்த்தாழி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருடசேவை புறப்பாடு மற்றும் அதனைத் தொடர்ந்து வெண்ணெய்தாழி உற்சவம் நடைபெற்று வருகிறது. அதைப்போல் இந்தாண்டும் 24 பெருமாள்கள் கருட சேவை புறப்பாடு 19ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று 13 பெருமாள் வெண்ணெய்த்தாழி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. தஞ்சாவூர் வெண்ணாற்றங் கரையிலிருந்து திவ்ய தேச பெருமாள்களுடன் பல்லக்குகளில் புறப்பட்டு நீலமேகப்பெருமாள், நரசிம்மபெருமாள், மணிகுன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், ரெங்கநாத பெருமாள், கோதண்டராமர், பிரசன்னவெங்கடேச பெருமாள், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட 13 பெருமாள் கோவில்களிலிருந்து வெண்ணெய் குடத்துடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பெருமாள்கள் புறப்பட்டு தஞ்சை நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.