தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் குங்கும காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆனித் திருவிழா நேற்று இரவு கொடியேற்றம் , காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. ஆராதனைகளை தொடர்ந்து கேடக வாகனத்திலேயே அம்மன் கோவில் வளாகத்திற்குள்ளேயே வலம் வந்தார். நிகழ்ச்சியில் சிவகங்கை சமஸ்தான மேலாளர் இளங்கோவன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.