கோபிசெட்டிபாளையம்: கோபி அக்ரஹார வீதியில் உள்ள நந்தகோகுலம் அமைப்பு சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாலை 4 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. நந்த கோகுலத்தில் உள்ள கோ சாலையில் சிறப்பு பூஜை நடந்தது. அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த, 108 குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்திருந்தனர். கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம், நந்தகோகுலத்தில் இருந்து துவங்கியது. ஊர்வலத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். கிருஷ்ணன் வீதி, அக்ரஹார வீதி, தேர்வீதி உள்ளிட்ட வீதிகள் வழியாக ஊர்வலமாக குழந்தைகள் வந்தனர்.ஊர்வலத்தின் முன் பெண்களின் கோலாட்டம் நடந்தது. நகராட்சி தலைவி ரேவதிதேவி, மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவர் செல்வம், ஒன்றிய செயலாளர் மனோகரன், நகர செயலாளர் காளியப்பன், மாணவரணி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.