தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி ஸ்ரீ மாரியம்மன் கோயில் கொடைவிழா நடந்தது. அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில் கால்நாட்டு விழாவும், அதை தொடர்ந்து தினசரி இரவு சிறப்பு பூஜைகளும் நடந்தது. அதைத் தொடர்ந்து இரவு சக்தியின் பெருமை உபந்நியாசம் நடந்தது. 31ம் தேதி இரவு நகைச்சுவை பட்டிமன்றமும், 1ம் தேதி மாலை 151 விளக்கு பூஜையும், இரவு இன்னிசை கச்சேரியும் நடந்தது. 2ம் தேதி குடியழைப்பும், மாலை தீர்த்தக்கரைச் செல்லுதல், அதை தொடர்ந்து 3ம் தேதி அம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேகங்களும், மதிய கொடையும், மதியம் இளைஞரணி சார்பாக அன்னதானமும் நடந்தது. இரவு முளைப்பாரி எடுத்து ஊர்சுற்றி வருதல், இரவு சாமகொடையும், அதிகாலை அம்பாள் சப்பரத்தில் ஊர்சுற்றி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் கமிட்டி மெம்பர் இளைஞரணிகளும் செய்துள்ளனர்.