பதிவு செய்த நாள்
11
ஆக
2012
10:08
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசித்தனர். இக்கோயில் ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா, ஆக., 3 ல் கொடியேற்றுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா நேற்று நடந்தது. ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., செயல்அலுவலர் தனபாலன், அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசித்தனர். மாலை 3.54 மணிக்கு அம்மன் வீதி உலா நடந்தது. இதையொட்டி, பக்தர்கள் அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரங்கண் பானை, பொங்கல் படைத்து வழிபட்டனர். விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சின்னையா டி.எஸ்.பி., தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.