விவசாயம் செழித்திட வேண்டி அய்யனார் புரவி எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2022 07:07
காரைக்குடி: கோட்டையூர் அருகேயுள்ள வேலங்குடியில், விவசாயம் செலுத்திட புரவி எடுப்பு விழா நடந்தது.
ஆண்டுதோறும் போதிய மழை வேண்டியும், விவசாயம் செழித்திடவும், திருமணம், குழந்தை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனுக்காகவும் 3 ஆண்டுக்கு ஒருமுறை ஸ்ரீ சோலை வளர்த்த அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று புரவி எடுப்புத் திருவிழா நடந்தது. கரியபட்டியில் தயார் செய்யப்பட்ட 16 குதிரைகள், யானை உள்ளிட்ட சிலைகளை 4 கி.மீ., மக்கள் தோளில் தூக்கி வந்தனர். வடகுடி, மணச்சை வழியாக வேலங்குடி குதிரை பொட்டல் கொண்டுவரப்பட்டது. பின்பு பிள்ளையார் மடத்திலிருந்து அய்யனார் கோயில் சாமியாடியை, மக்கள் குதிரை பொட்டலுக்கு அழைத்து வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து முதல் குதிரையான அய்யனார் குதிரையில், சாமியாடி ஏறி நின்றவுடன் குதிரைகளை பொதுமக்கள் தூக்கிச் சென்று சென்றனர். இவ்விழாவில் வேலங்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தை தந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.