பதிவு செய்த நாள்
13
ஜூலை
2022
08:07
சேலம்: பொன்னம்மாபேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் ‘ஜோஷ்டாபிஷேக’த்தையொட்டி, மூலவருக்கு ‘அன்னப்பாவாடை’ வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
சேலம்: சேலம், பொன்னம்மாபேட்டை, ஆஞ்சநேயர் கோவிலில், ஆனியில் ஜோஷ்டாபிஷேகம் நடத்தப்படும். நடப்பாண்டு, ஜோஷ்டாபிஷேகம் எனும் அன்னாபிஷேக விழா நேற்று நடந்தது. அனுமன், பட்டாபிஷேக ராமர் உற்சவர்களுக்கு யாகம் செய்து, அதில் வைத்து பூஜித்த புனிதநீரால் திருமஞ்சனம் நடந்தது. சீதாதேவி, லட்சுமணர் சமேத ராமசந்திர மூர்த்திக்கு, தயிர் அன்னம், புளியோதரையால் அன்னப்பாவாடை படையல் சார்த்தப்பட்டது. அதேபோல், அனைத்து வகை காய்கறி, இனிப்பு, கார வகைகளை, அனுமன் முன் படையல் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மூலவர் அனுமன் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் பட்டாச்சாரியார்கள், கட்டளை உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.