அவிட்டம் - 3, 4: எண்ணியதை செயல்படுத்தும் உங்களுக்கு இந்த மாதம் ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண முடியும். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. அரசியல்வாதிகள் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். மாணவர்கள் மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். தந்தை, தாய் இவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். உங்களின் மனதை எல்லோரும் புரிந்து நடந்து கொள்வார்கள்.
பரிகாரம்: நவக்கிரகங்களை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும். சந்திராஷ்டமம்: ஆக. 1, 2 அதிர்ஷ்ட நாள்: ஆக. 1
சதயம்: உணர்ச்சிகளால் எதிலும் முடிவெடுக்கும் உங்களுக்கு இந்த மாதம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. இல்லற சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம். பெண்களுக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள்.
பரிகாரம்: ஸ்ரீபைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும். சந்திராஷ்டமம்: ஆக. 2, 3 அதிர்ஷ்ட நாள்: ஆக. 11
பூரட்டாதி - 1. 2. 3: தனது அயராத உழைப்பினால் உன்னத நிலை பெறும் உங்களுக்கு இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். ராசிக்கு இரண்டில் சஞ்சாரம் செய்யும் குருவால் முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். கலைத்துறையினருக்கு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சோதனைகள் வெற்றியாக மாறும்.
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும். சந்திராஷ்டமம்: ஆக. 3, 4 அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, ஆக. 12
மேலும்
பங்குனி ராசி பலன் (15.3.2025 முதல் 13.4.2025 வரை) »