ஆடி என்றொரு கொடிய அரக்கன் இருந்தான். தவத்தில் ஈடுபட்ட அவன் பிரம்மாவிடம் நினைத்த வடிவத்தைப் பெறும் சக்தியை வரமாகப் பெற்றான். அதன்பின் வேடிக்கையாக சிவபெருமானை ஏமாற்ற விரும்பி கைலாயத்திற்கு புறப்பட்டான். அங்கு தன் உருவத்தை அம்பிகையைப் போல மாற்றி சிவபெருமானை நெருங்கினான். இதை ஞானதிருஷ்டியால் அறிந்த சிவபெருமான் நெற்றிக் கண்ணால் அரக்கன் சாம்பல் ஆக்கினார். அவனது நோக்கத்தை அறிந்த அம்பிகைக்கு வருத்தம் ஏற்பட்டது. அரக்கனின் நினைவாக ஒரு மாதத்திற்கு ‘ஆடி’ எனப் பெயரிட்டு அதில் தன்னை வழிபடுவோருக்கு அருள்புரியத் தொடங்கினாள்.