பிரிந்தவர் மீண்டும் சேர... இங்கு வழிபாடு செய்யுங்க
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2022 12:07
கும்பகோணம் அருகிலுள்ள சத்திமுற்றம் சிவக்கொழுந்தீசர் கோயிலில், சுவாமி தீ வடிவமாக அருள்புரிகிறார். அம்பிகை பெரியநாயகி அன்பின் காரணமாக சுவாமிக்கு முத்தமிட்ட தலம் என்பதால் சக்திமுத்தம் என்றாகி தற்போது சத்திமுற்றம் எனப்படுகிறது. இங்குள்ள அம்மன் ஒரு காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலை ஆவுடைமீது மடக்கி , இரு கைகளாலும் லிங்கத்தைத் தழுவி நிற்கும் கோலம் எங்கும் காண முடியாத அற்புதம். இங்கு வழிபாடு செய்பவர்களின் திருமணம் தடையின்றி நடக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேர்வர்.