பதிவு செய்த நாள்
20
ஜூலை
2022
12:07
திருப்பூர்: திருப்பூரின் காவல் தெய்வம் என்று போற்றப்படும், ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.நுாற்றாண்டு பழைமை வாய்ந்த ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில், நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, குணடம் திருவிழா நடந்து வருகிறது. அதன்படி, 16வது ஆடி குண்டம் திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.நேற்று காலை, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகளை தொடர்ந்து, கொடியேற்றப்பட்டது. வரும், 25ம் தேதி மாலை அம்மை அழைத்தல், திருக்கல்யாணம், குண்டத்துக்கு அக்னி வளர்க்கும் நிழ்ச்சிகள் நடக்கின்றன.வரும், 26 ம் தேதி காலை, 6:00 மணிக்கு பூசாரி மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்குதல், காலை, 9:00 மணிக்கு, அக்னி அபிேஷகம் மற்றும் பொங்கல் விழா, அன்னதானம் நடக்கிறது.