திருநெல்வேலி: நெல்லையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு சீர்வரிசை வழங்குதல் மற்றும் நதிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு சீர்வரிசை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக நெல்லை ்ஷன் சிருங்கேரி மடத்தில் இருந்து பெண்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. தாமிரபரணி நதியை அம்பாளாக பாவித்து, கருப்பு வளையல், கருகுமணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை தாமிரபரணி நதிக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை தைப்பூச மண்டபத்தில் நடந்தது. வைதீகர்கள் பாஸ்கர வாத்யார், சந்தோஷ் வாத்யார், சீதாராமன் வாத்யார் மற்றும் தபண்டிதர்கள் தமந்திரங்களை சொல்லி தாமிரபரணி நதிக்கு பூஜைகள் செய்தனர்.
தாமிரபரணி அஷ்டோத்ர மந்திரங்களை சொல்லி பூஜைகள் செய்தனர். நதிக்கு பலவிதமான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு பெண்களின் ஆரத்தி வைபவம் நடந்தது.நதிக்கு சிறப்பு பூஜை செய்த வேதபண்டிதர் பாஸ்கரவாத்யார் கூறுகையில், ‘தாமிரபரணி நதிக்கு (விசாகம் நட்சத்திரம்) அந்தஸ்து உண்டு. மகாநதி என தாமிரபரணியை வேத வியாசர் பேற்றுகிறார். திரேதா யுகத்திலும் தாமிரபரணியின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளது. பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி நதிக்கரையில் பல கோயில்கள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தாமிரபரணி நதியில் தினந்தோறும் நாமும் நீராடுவதோடு, குழந்தைகளையும் நீராடச் செய்து கோயில்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும். நதியின் பெமைகளையும், சிறப்புகளையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் செய்திருந்தனர்.