பதிவு செய்த நாள்
04
ஆக
2022
12:08
வீரவநல்லுார்: வீரவநல்லுார் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லை மாவட்டம், வீரவநல்லுார் திரவுபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று பூக்குழி திருவிழாநடை பெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான பூக்குழி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. விழாவில் வரும் 5ம் தேதி திருக்கல்யாணம், 6ம் தேதி மாலை6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள்காளி வேடம் அணிந்து சப்பரவீதி உலா நடக்கிறது. 12ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கிறது. இதையொட்டி காலை9 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், மாலை 6 மணிக்கு பூக்குழி இறங்கும் வைபவம், இரவு 10 மணிக்கு சுவாமி, அம்பாள் சப்பரம் வீதி உலாநடக்கிறது. 13ம் தேதி மஞ்சள்நீராட்டு விழா, 14ம் தேதி சுவாமி, அம்பாள் பொன்னுாஞ்சல் ஆடுதல், 16ம் தேதி காவு பூஜை வீரபுத்திரர், சங்கமித்திரை படைப்பு தீபாராதனை நடக்கிறது. 17ம் தேதி இரவு தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.
7ம் தேதி முதல் 13ம் தேதி வரை தினமும் இரவு சுவாமி, அம்பாள்வீதி உலாநடக்கிறது. ஏற்பாடுகளைஅக்தார் பாபநாசம் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.