திருப்பரங்குன்றம் கோயிலில் சுந்தரர் குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2022 04:08
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரர் குருபூஜையை முன்னிட்டு இன்று காலை சண்முகர் சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர்கள் சக்தி விநாயகர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முன்பு வெள்ளி குடத்தில் புனித நீர் நிரப்பி பூஜைகள் முடிந்து மூலவர்களுக்கு அபிஷேகம் நடந்தது. கோயில் ஓதுவார் பொன்முத்துவிநாயகம் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ஓதுவார்களால் காலை 8:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை ஏழாம் திருமுறை முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. உற்சவர் சுந்தரர் சிம்மாசனத்தில் கொடிக்கம்பம், நந்தியை மூன்று முறை வலம் சென்று உற்சவர் சுப்பிரமணியசாமி சன்னதி சென்றடைந்தார். அங்கு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயா வேத பாடசாலை மாணவர்கள் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.