காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2022 10:08
ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் விநாயகர் சாமி கோயிலுக்கு இன்று ஆந்திர மாநில துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான ஸ்ரீ நாராயணசாமி அவர்கள் குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் பூர்ண கும்ப வரவேற்பு ஏற்பாடு செய்தனர் . தொடர்ந்து கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் சார்பில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வழங்கினர் . பின்னர் கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் பாபு துணை முதல்வருக்கு கோயிலில் நடக்கயிருக்கும் மகா கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து அமைச்சரிடம் விவரித்தார். இதில் கோயில் செயற்பொறியாளர் வெங்கட்நாராயணா மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.