காளஹஸ்தி சிவன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2022 10:08
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை காலை 7.30.முதல் 9 மணி வரை ராகு கால சமயத்தில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரனை பூஜைகளில் ஈடுபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். திங்கட்கிழமை என்பதால் உள்ளூர் பக்தர்களாளும் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது .ஆனால் பக்தர்களுக்கு கோயில் அதிகாரிகள் போதுமான அடிப்படை வசதிகள் செய்யாததால் சாமி தரிசனத்திற்காக வரிசைகளில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து காலை முதல் மாலை வரை சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளில் ஈடுபட வந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் அபிஷேகங்கள், நித்திய கல்யாணம் ,ஹோமம் ,சுப்ரபாத சேவை, மிருத்யுஞ்ஜய ஜெபம், தீபாராதனை, அர்ச்சனை ,கோ பூஜை அவற்றில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்தனர். இதனால் பக்தர்கள் வாங்கிய பிரசாதங்கள், அபிஷேக டிக்கெட் கள், ராகு கேது பூஜை டிக்கெட் கள், தரிசன டிக்கெட் ஆகியவற்றில் மொத்தமாக இன்று ஒரு நாள் மட்டும் வரும் கோயில் வருமானம் சுமார் ₹. 85,000/ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.