பதிவு செய்த நாள்
15
ஆக
2022
10:08
புவனகிரி: புவனகிரி ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் 20 ஆண்டு ஆடிப்பூர விழா கஞ்சிக் கலையை ஊர்வலத்துடன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
புவனகிரி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் விழாவை முன்னிட்டு 14ம் தேதி காலை சக்தி கொடி ஏற்றினர். ஆன்மீக பிரச்சார குழு துணை செயலாளர் பார்த்தசாரதி, புவனகிரி வட்ட தலைவர் சஞ்சீவிராயர், மாவட்ட இணை செயலாளர் செல்வராஜ், கோவிந்தராஜ் முன்னிலையில் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. இன்று காலை 6.00 மணிக்கு கூட்டு வழிபாடு புவனகிரி வட்ட வேள்வி குழு தலைவர் மனோகரி பட்டாபி தலைமையில் நடந்தது. கிரிஜாராணி, குமுதவல்லி, காஞ்சனா, யசோதா, ஜெயலட்சுமி, கோவிந்தம்மாள் முன்னிலையில் கஞ்சிக்கலைய ஊர்வலத்தை,மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி, மைதிலி துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கினர். மாலை 3.00 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு பேராசிரியர் அன்பழகன் தலைமையில் மன்ற பொருளாளர் சுப்ரமணியன் முன்னிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஞானகுமார், பாலக்குமார் டாக்டர் அர்ச்சுணன், உத்ராபதி, சங்கரன், சுப்பிரமணியன், வெங்கடராமன்,அருளானந்தம் பேசினர். புவனகிரி பகுதி பள்ளிகளைச் சேர்ந்த 380 மாணவர்களுக்கு மதிய உணவிற்கு எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர், 400 மாணவர்களுக்கு நோட்டுகள், மற்றும் விவசாயிகள் ஏழு பேருக்கு மருந்து தெளிப்பானை சமுதாயப் பணிகள் சிறப்பு அழைப்பாளர் கிருபானந்தன்,மோகன்ராஜ் வழங்கினர். ரேவதி நன்றி கூறினார்.