குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயிலில் 1200 மதுபாட்டில்களுடன் கிடா விருந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2022 08:08
கம்பம்: குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப் பெருந் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக சோணை கருப்பணசாமிக்கு ஆயிரத்து 200 மதுபாட்டில்கள் படைத்தும், 32 ஆட்டு கிடா 15 கோழிகள் அறுத்தும் விருந்து படைக்கப்பட்டது.
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருந்திருவிழா ஆடி மாதம் கொண்டாடப்படும். இந்தாண்டு கடந்த ஜூலை 23 முதல் ஆக. 20 வரை திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, நான்கு சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெற்றது. வரும் ஆக. 20 ல் ஐந்தாவது வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையே இக்கோயிலில் எழுந்தருளியுள்ள காவல் தெய்வம் சோணை கருப்பணசாமிக்கு நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆயிரத்து 200 மதுபாட்டில்கள் படைக்கப்பட்டது. பின்ன் 34 ஆட்டு கிடாக்கள் வெட்டியும், 15 கோழிகளை அறுத்தும் பொங்கல் வைத்து கருப்பண சாமிக்கு படையல் போட்டனர். இந்த விருந்தில் குச்சனூர் மட்டுமல்லாது கூளையனுார், மார்க் கையன்கோட்டை, உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.