பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2022 08:08
மேலூர்: மேலுாரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணன் கோயிலில் ஆக.17 காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்ற பக்தர்கள் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். அங்கு கிருஷ்ணருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பிறகு அன்னதானமும் உறியடி நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ரத ஊர்வலத்தில் கிருஷண்ர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இத் திருவிழாவில் மேலுார்,தனியாமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.