பதிவு செய்த நாள்
29
ஆக
2022
11:08
நாகப்பட்டினம்: இந்தியாவிலேயே முதல் முதலாக, நாகையில் 32 அடி உயர அத்தி விநாயகர் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.திரளான பக்தர்கள் பங்கேறறு சுவாமி தரிசனம் செய்தனர். நாகையில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,32 அடி உயர விஸ்வரூப விநாயகர் வீதியுலா நடைபெறுவது வழக்கம்.விஸ்வரூப விநாயகர் வீதியுலா துவக்கப்பட்டு,35 ஆண்டுகள் நிறைவடைந்து,36 ம் ஆண்டை முன்னிட்டு, அத்தி மரத்திலான 32 அடி உயரம்,18 அடி அகலமுடைய அத்தி விநாயகர் உருவாக்கப்பட்டு நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.
விஸ்வரூப விநாயகர் குழு சார்பில், ஒரு கோடி ரூபாய் செலவில், திருவாரூர் மாவட்டம் ஆண்டிப்பந்தலில், திருநாவுக்கரசு ஸ்தபதியார் தலைமையில்,15 பேர் கொண்ட குழுவினர், கடந்த 8 மாதங்களாக பணியாற்றி உருவாக்கியுள்ளனர்.16 டன் எடையுடை ய, அத்தி மரத்திலான விநாயகர் 32 அடி உயரத்தில்,18 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டு நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. நாகை, நீலாயதாட்சி அம்மன் கோவில் வாசலில் இருந்து புறப்பட்டு,4 வீதிகளில் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.