கருப்பணசுவாமி, அம்மாச்சியார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2022 04:08
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மைக்குடியில் ஸ்ரீ பொந்துபுளி கருப்பணசுவாமி, அம்மாச்சியார் என்ற பூர்ண வள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய யாகசாலை பூஜையில் விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பூஜை உட்பட முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. இன்று காலை 5 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். ஆறு மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. காலை 9 மணிக்கு ஸ்ரீ பூர்ண வள்ளி அம்மன் கோவிலில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. காலை 10 மணிக்கு ஸ்ரீ பொந்துபுளி கருப்பணசாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.