ரூ.11 லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2022 06:08
தஞ்சாவூர், விநாயகர் சதுர்த்தி வரும் 31ம் தேதி வெகு விமர்சையாக கொண்டப்பட்ட உள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், மடத்து தெருவில் உள்ள ஸ்ரீ பகவத் விநாயகர் கோவிலில், ஏழாம் நாளான நேற்று இரவு 11 லட்சம் ரூபாய் நோட்டுகளால், விநாயகருக்கு குபேர லட்சமி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.