ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு கூட்டம் சிவன் கோயில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூறு .தாரக சீனிவாசலு தலைமையில் நடைபெற்றது .இந்தக் கூட்டத்திற்கு முக்கிய விருந்தினராக ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் முக்கிய( அம்சங்களாக) பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் குறிப்பாக ( ஆயுத பூஜை) விஜயதசமி அன்று முதல் கோயிலில் உள்ள நிலுவையில் உள்ள தங்கத்தைப் பயன்படுத்தி தங்க நாகப்படகுகளுடன் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகளை தொடங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தங்க நாகபடகுகளை பயன்படுத்திச் செய்யப்படும் பூஜையில் பக்தர்கள் ஈடுபட பத்தாயிரம் வரை டிக்கெட்( விலை) நிர்ணயிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக அறங்காவலர் குழு தலைவர் தெரியப்படுத்தினார். இதே போல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயில்களான அர்த்தநாரீஸ்வரர் கோயில், அகஸ்தீஸ்வரர் கோயில், ஸ்ரீ நீலகண்ட சமேத அன்னபூர்ணேஸ்வர சுவாமி கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது . ஆன்மீகத் தலமான ஸ்ரீகாளஹஸ்தி தொகுதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்களை புனரமைக்க வேண்டும் என்றும் புதிய சிவன் கோயில்களை கட்ட வேண்டும் என்றும் ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் ஐந்து லட்சம் வரை பண உதவி வழங்க வேண்டும் என்று அறங்காவலர் குழு முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அறநிலைத்துறையிடமிருந்து அனுமதி வந்ததும் அமல்படுத்தப்படும் என்று தெரியப்படுத்தினார் .இதேபோல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான தர்மராஜர் கோயில் வளாகத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ( நிர்மாணிக்க வேண்டும் என்றும்) கட்டப்பட வேண்டும் என்றும், இதேபோல் வரதராஜ பெருமாள் கோயிலில் விடுதியை சீரமைக்க வேண்டும் என்றும் ,இதே போல் முத்தியாலம்மன் கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தையும் புனரமைக்க வேண்டும் என்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் போன்றவை இன்று திங்கட்கிழமை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட தாக அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூறு .தாரக சீனிவாசலூ தெரியப்படுத்தினார்.மேலும் கோயிலில் பல்வேறு வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் விதமாக தங்களின் அறங்காவலர் குழு முழு முயற்சியோடு செயல்பாட்டில் இருக்கும் என்று அறங்காவலர் குழு தலைவர் தெரியப்படுத்தினார். இந்த கூட்டத்தில் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ,துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள், வேத பண்டிதர்கள் ,அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.