பதிவு செய்த நாள்
09
செப்
2022
10:09
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு உத்திரதணிகாசல சிவசுப்ரமணிய சுவாமி கோவில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதற்கான விழா கடந்த 5ம் தேதி காலை அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கோ பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கும்பலங்காரம், முதல்கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் விடியற்காலை நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தனம், தத்துவார்ச்சனையை தொடர்ந்து பூர்ணாஹூதி மற்றும் மகாதீபாராதனை நடந்தது.காலை 6:00 மணிக்கு, யாத்ராதானத்தை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து 6:40 மணிக்கு கோபுர மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 10:00 மணிக்கு மூலவருக்கு மகா அபிேஷகமும், மாலை 6:00 மணிக்கு வள்ளி தேவசேனா சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நமச்சிவாயம், பண்ருட்டி முருகப்பா குரூப்ஸ் மாதவன், விலங்கல்பட்டு வைத்தியநாதன் சுவாமிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.