பதிவு செய்த நாள்
14
செப்
2022
04:09
மறைமலை நகர் : சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த, செங்குன்றம் கிராமத்தில் பழமையான வண்டி பாளையத்தம்மன் கோவில் மற்றும் கங்கையம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலை புனரமைத்து, மண்டபம் மற்றும் கோபுரம் கட்டி கும்பாபிஷேகம், நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, கோபுரம் மற்றும் மண்டபம் கட்டும் பணிகள், சமீபத்தில் நிறைவடைந்தன.
மூன்று நாட்களாக பல பூஜைகள், ஹோமங்கள், புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.நேற்று, நான்காம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, புதிய சிலைகள் கண் திறத்தல், அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, கலசங்கள் எடுத்து செல்லப்பட்டு கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.செங்குன்றம், சின்னசெங்குன்றம், சிங்கப்பெருமாள் கோவில், கோவிந்தபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.