பதிவு செய்த நாள்
14
செப்
2022
05:09
தடிக்காரன்கோணம்: பத்துகாணி காளி மலையில் நடக்கும் துர்க்காஷ்டமி திருவிழாவையொட்டி சமுத்ரகிரி ரதயாத்திரை வரும் 30ம் தேதி துவங்குகிறது. கன்னியாகுமரி, மண்டைக்காடு, கொல்லங்கோடு, காளிமலை, ஆகிய நான்கு சத்திஸ்தலங்கள் உள்ளது.
கொண்டைக்கெட்டி, கூனிச்சி, வரம்பொதி ஆகிய மூன்று மலைகள் ஒருங்கே அமைய பெற்றது இந்த புண்ணிய ஸ்தலம். இப்புனித மலையில் ஸ்ரீதுர்க்காதேவி, ஸ்ரீதர்மசாஸ்தா , ஸ்ரீநாகயக்க்ஷி ஆகியோர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த புண்ணிய ஸ்தலத்தில் ஆண்டு தோறும் துர்க்காஷ்டமி திருவிழா நடக்கும். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி கன்னியாகுமரியிலிருந்து, சமுத்ரகிரி ரதயாத்திரைது வங்கிகாளி மலையை சென்றடையும் . 30ம் தேதி துவங்கும் ரத யாத்திரை தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கும். காலை 6மணிக்கு இருமுடிகட்டு மற்றும் புனிதநீர் நிறைத்தல் நடக்கும். தொடர்ந்து நடக்கும் சமுத்ரகிரி ரதயாத்திரைக்கு மத்தியஇணை அமைச்சர் முருகன் தலைமை வகித்து பே சுகிறார். காளிமலை டிரஸ்ட் முன்னாள் தலைவர் சலீம்குமார், உறுப்பினர் குழிச்சல் செல்லன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். காணிமடம்யோகிராம் சுரத்குமார் மந்த்ராலய நிறுவனர் பொன் . காமராஜ் சுவாமி மஹாராஜ் ஆசியுரை வழங்குகிறார். எம்.ஆர். காந் தி எம். எல்.ஏ., கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டிரஸ்ட் தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் விழா குழுதலைவர் முத்துராமன், பொது செயலாளர் சுஜித்குமார், பொருளாளர் வேலுதாஸ் மற்றும் விழாக்குழு பொறுப்பாளர்கள், காப்பாளர்கள் செய்து உள்ளனர்.