Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வர சித்தி விநாயகர் கோயிலில் வெள்ளி ... ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி உபகோவில் நிலத்தை மோசடியாக விற்றவருக்கு ஜாமின் மறுப்பு
எழுத்தின் அளவு:
வடபழநி உபகோவில் நிலத்தை மோசடியாக விற்றவருக்கு ஜாமின் மறுப்பு

பதிவு செய்த நாள்

15 செப்
2022
11:09

சென்னை: வடபழநி ஆண்டவர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக விற்ற வழக்கில், கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்க மறுத்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, வியாசர்பாடியில், கரபாத்திர சிவபிரகாச சாமிகள் மடாலயம் உள்ளது. இதற்கு சொந்தமாக, ஜார்ஜ் டவுன் பத்ரியன் தெருவில், 1,624 சதுர அடி பரப்பளவு நிலம் உள்ளது. வடபழநி ஆண்டவர் கோவிலின் உப கோவிலான கரபாத்திர சிவபிரகாச சாமிகள் மடாலய நிலம், போலி ஆவணங்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நில மோசடி தடுப்பு பிரிவில், வடபழநி ஆண்டவர் கோவில் உதவியாளர் ஸ்ரீனிவாசன் புகார் அளித்தார்.

இதன்படி, விசாரணை நடத்திய போலீசார், சட்டத்துக்கு புறம்பான முறையில் கோவில் சொத்தை விற்றதாக, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி, 51, உள்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆக., 29ல் ராமமூர்த்தியை கைது செய்தனர். ஜாமின் கேட்டு அவர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி வாதாடியதாவது:இந்த நிலம் 1937ல் நாராயண ஸ்வமப்பா என்பவரிடம் இருந்து, கோவில் நிர்வாகத்தினர் வாங்கியுள்ளனர்.

தற்போது, இந்த நிலம் வடபழநி ஆண்டவர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. விசாரணையில், இந்த நிலத்துக்கு போலியாக பொது அதிகார ஆவணம் உள்பட ஆவணங்களை தயார் செய்து, அமுதா எஸ்தர் என்பவருக்கு, 1.10 கோடி ரூபாய்க்கு விற்றது தெரியவந்துள்ளது.இதன் வாயிலாக, ராமமூர்த்தி மட்டும் 62 லட்சம் ரூபாயும், மற்றவர்கள் 48 லட்சம் ரூபாயும் லாபம் அடைந்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய ஏழு பேரில், மனுதாரருடன் சண்முகம், ராஜிவ்காந்தி பாண்டியன், ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகிறோம். எனவே, ஜாமின் வழங்கக் கூடாது.இவ்வாறு அவர் வாதாடினார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:இருதய நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால், ஜாமினில் விட, மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், மனுதாரர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, கோவில் சொத்தை முறைகேடாக விற்று, பெரியளவில் பணம் பெற்றுள்ளார். மருத்துவ உதவிகள் தேவையெனில், அதற்கான வசதிகள் சிறையில் உள்ளன. மருத்துவ அவசரம் எனில், சிறை அதிகாரிகள் உரிய முறையில் கவனித்து கொள்வர். விசாரணை துவக்க நிலையில் உள்ளதால், மனுதாரருக்கு ஜாமின் வழங்க முடியாது; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோமவார விரதம் என்பது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கடைப்பிடிக்கபடுகிறது. கார்த்திகை மாத சோமவாரங்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், 500 நடன கலைஞர்கள் பரத நாட்டியம், கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., துாரம் ... மேலும்
 
temple news
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆதிரெத்தினேஸ்வரருக்கு 108 வகையான மூலிகைகளால் ... மேலும்
 
temple news
கோவை; ராம்நகர், கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு கார்த்திகை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லி மர பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar