இஸ்லாமிய தம்பதி திருமலை ஏழுமலையானுக்கு ரூ.1.02 கோடி நன்கொடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2022 04:09
திருப்பதி, திருமலை ஏழுமலையானுக்கு இஸ்லாமியதம்பதி, 1.02 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினர்.சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் கனி - சுபினா பானு தம்பதி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நேற்று 1.02 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினர். வி.ஐ.பி., பிரேக் தரிசனம் முடித்த பின், அவர்கள் தங்கள் குடும்பத்துடன் ரங்கநாயகர் மண்டபத்தில் இதற்கான வரைவோலையை செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினர்.இதில், அன்னதான அறக்கட்டளைக்கு 15 லட்சம் ரூபாயும், திருமலையில் சமீபத்தில் நவீனப்படுத்தப்பட்ட ஸ்ரீ பத்மாவதி ஓய்வறையில் புதிய மரச்சாமான்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்கவும் 87 லட்சம் ரூபாய் வழங்கினர்.ஏழுமலையானிடம் மிகவும் பக்தி கொண்ட இந்த தம்பதி, அன்னதான அறக்கட்டளைக்கு பலமுறை நன்கொடை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.