திருப்பதி: பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு பாரம்பரிய முறையில் கோவிலை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடைபெற்றது.
தெலுங்கு உகாதி,ஆனிவார ஆஸ்தானம்,வைகுண்ட ஏகாதசி மற்றும் பிரம்மோற்சவம் என்று வருடத்திற்கு நான்கு முறை விழா நாட்களுக்கு முன்வரும் செவ்வாய் கிழமைகளில் கோவிலை சுத்தம் செய்யும் இந்த திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறும் அடுத்தவாரம் பிரம்மோற்சவம் துவங்க இருக்கும் நிலையில் இன்று இந்த நிகழ்வு கோவில் தலைமை அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கோவில் தங்க விமானம் உள்ளீட்ட பகுதிகள் தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செய்யப்படுவதுடன் சுவர்கள்,கூரைகள் உள்ளீட்ட முழுகோவிலும் பரிமளம் எனப்படும் நறுமண கலவை பூசப்பட்டது. இதே போல பிரம்மோற்சவ விழாவினை களைகட்ட வைக்கப்போகும் கோவிலுக்கு சொந்தமான யானைகள் குதிரைகள் மாடுகள் யாவையும் மாடவீதிகளில் வலம்வந்து பயிற்சிகளில் ஈடுபட்டன. கோவிலுக்கு பல மொழி பேசும் பக்தர்கள் வருகின்றனர் அவர்களுக்கு உதவும் வகையில் ஆங்காங்கே க்யூஆர் கோட் நிறுவப்படும் பக்தர்கள் தங்களிடம் உள்ள மொபைல் போன் ஸ்கேனர் மூலம் இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் எங்கே நிற்கிறீர்கள் என்பதில் ஆரம்பத்து எங்கே எப்படி செல்லவேண்டும் என்று வழிகாட்டும்.முதல் கட்டமாக இந்த மொபைல் ஆப் திருமலை திருப்பதிக்கு சேவை செய்யவரும் பல்வேறு மாநில பக்தர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது பின்னர் பக்தர்கள் பயன்பாட்டிற்கும் தரப்படும்.