காஞ்சிபுரம்:உலக அமைதிக்காக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஓதுவாமூர்த்திகளின் தேவார இன்னிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
ஓதுவார் ஆராய்ச்சி அறக்கட்டளை, ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம், அமெரிக்க சைவ சிந்தாந்த சபை சார்பில், உலக அமைதி தினமான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை, தொண்டை நாட்டு திருத்தலஓதுவாமூர்த்திகளின், தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், காஞ்சிபுரம், திருமாகறல், திருவாலங்காடு, திருத்தணி உள்ளிட்ட தொண்டை நாட்டு திருத்தலங்களைச் சேர்ந்த ஓதுவாமூர்த்திகள் மற்றும் வயலின், கஞ்சிரா இசைகலைஞர்கள் தேவார இன்னிசை நிகழ்த்துகின்றனர்.