திருத்தணி:திருத்தணி, அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், நடப்பாண்டில், நவராத்திரி விழா இம்மாதம், 26ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 6ம் தேதி வரை நடக்கிறது.
நவராத்திரி முதல் நாளில் மூலவர் ராஜ ராஜேஸ்வரி; இரண்டாம் நாள் மீனாட்சி ; மூன்றாம் நாள் காசிவிசாலாட்சி; நான்காம் நாள் அன்னபூரணி; ஐந்தாம் நாள் வாராகி; ஆறாம் நாள் தனலட்சுமி; ஏழாம் நாள் கஜலட்சுமி ; எட்டாம் நாள் துர்காஅஷ்டமிகாளி; ஒன்பதாம் நாள் சரஸ்வதி போன்ற அலங்காரத்தில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மேலும், அக்.5ம் தேதி பத்தாம் நாளில், காலை 9:00 மணிக்கு விஜயதசமி கலசபிஷேகம், 108 பால்குட அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது.பதினோராம் நாள் வசந்த உற்சவம் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் மற்றும் நவராத்திரி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.