திருக்கடையூர் கோவிலில் 101 வயதை எட்டிய தம்பதிக்கு பூர்ணாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2022 01:09
மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலில் 101 வயதை எட் டிய தம்பதியினருக்கு பூர்ணா அபிஷேக ம் நடைபெற்றது. திரளானோர் கலந்துகொண் டு ஆசி பெற்றவர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சுவாமி கால சம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கோவிலில் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம். இதனால் நாள்தோறும் ஏராளமான 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று சீர்காழி எடமணல் மேலபாளையத்தை சேர்ந்த 100 வயது பூர்த்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி- கோமளவல்லி தம்பதியினர் திருக்கடையூர் கோவிலுக்கு வந்து சிறப்பு ஹோமம் மற்றும் பூர்ணாபிஷேகம் செய்து, புது மாங்கல்யம் அணிந்து சுவாமி, அம்பாளை வழிபட்டனர். பூஜைகளை சுந்தரமூர்த்தி குருக்கள் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் 4 தலைமுறை பேரன் பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கிருஷ்ணமூர்த்தி- கோமளவல்லி தம்பதியினரிடம் ஆசி பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எடமணல் சண்முகம் செய்திருந்தார்