திருவண்ணாமலை கோயில்களில் கந்த சஷ்டி விழா : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2022 02:10
திருவண்ணாமலை : திருவண்ணாமலை ரவுண்டானா அருகே உள்ள வட வீதி சுப்பிரமணியன் கோவில் முன் கந்த சஷ்டி நிறைவை யொட்டி சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள கம்பத்திளையனார் சன்னதியை ஏராளமான பக்தர்கள் 108 முறை சுற்றி வந்து நெற்றிக்கடன் செலுத்தி வழிபட்டனர். மேலும் திருவண்ணாமலை சுற்றுபகுதியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.