Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : கார்த்திகை மாத பலன் துலாம் : கார்த்திகை மாத பலன் துலாம் : கார்த்திகை மாத பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கன்னி : கார்த்திகை மாத பலன்
எழுத்தின் அளவு:
கன்னி : கார்த்திகை மாத பலன்

பதிவு செய்த நாள்

16 நவ
2022
08:11

உத்திரம்  2, 3, 4:
எதை செய்தாலும் நேர்மையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் பணவரவு இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சின் இனிமை,  வாக்கு சாதுரியத்தால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். திடீர் பயணங்கள் ஏற்படலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.  வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பைக் கையாளும் போதும் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் பொறுப்பு கூடுதலாகும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.   கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணியாளர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் அக்கறை தேவை.  சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. சிலருக்கு விபரீத ஆசைகள் ஏற்படலாம். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான  பலன் கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவால் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை போக்கிக் கொள்வர். புத்தகங்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.
பரிகாரம்: அம்மனுக்கு பூமாலை சாற்ற மனநிம்மதி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: டிச.4
அதிர்ஷ்ட நாள்: டிச.13

அஸ்தம்
எதிலும் வேகம் காட்டும் உங்களுக்கு இந்த மாதம் எதிர்ப்பு அகலும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. பணவரவு அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதியவர்களின்  நட்பு உண்டாகும். வாகனப் பயணத்தால் நன்மை சேரும். அரசு விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். சமூகத்தில் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்னைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில்,  வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பழைய பாக்கி வசூலாகும். வியாபார விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.  மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் எதிர்ப்பு மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம்  லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விருந்துகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு புதியவர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். திடீர் பயணம் செல்ல நேரிடும்.  கலைத்துறையினருக்கு பொறுமை, நிதானம் தேவை.  மறைமுக போட்டியால் நெருக்கடியை சந்திக்கலாம்.  அயல்நாட்டில் இருந்து நல்ல செய்தி வந்துசேரும். அரசியல்வாதிகளுக்கு  சமூகத்தில் மதிப்பு  உயரும். மாணவர்களுக்கு போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவர். சகமாணவர் நலனில் அக்கறை காட்டுவர்.
பரிகாரம்: காவல் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்ய கஷ்டம் விலகும்.
சந்திராஷ்டமம் :டிச. 5
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, டிச.14

சித்திரை  1, 2
 நிதானமாக செயல்படுவதுடன் அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பளிப்பீர்கள். இந்த மாதம் நட்சத்திரநாதன் செவ்வாய் பல வகையிலும் நன்மைகளை வாரி வழங்குவார். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக  நடந்து முடியும். பணவரவு இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். வீண்பகை ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம்  ஏற்படும். பிடிவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் சாந்தமாக உரையாடுவது அவசியம். பணவரவு திருப்தி தரும்.  பணியாளர்கள்  கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன்  நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தினரின் செயல்கள் உங்கள் கோபத்தை துாண்டலாம்.  வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.   கணவன், மனைவிக்குள் திடீர் வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு பிறரது செயல்கள் திடீர் கோபத்தை ஏற்படுத்தலாம். கலைத்துறையினருக்கு  எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  அரசியல்துறையினர் வீண் செலவை குறைப்பது நல்லது. மாணவர்கள்  சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பர்.  பிடிவாதத்தை விடுவது நன்மை தரும்.
பரிகாரம்: குருவுக்கு அர்ச்சனை செய்ய எல்லா நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டமம்:டிச. 6
அதிர்ஷ்ட நாள்: நவ.17, 18, டிச.15

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar