மூணாறில் திருக்கார்த்திகை திருவிழாவுக்கு தயாராகும் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2022 04:11
மூணாறு: மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழாவுக்கான ஏற்பாடும் மும்முரமாக நடந்து வருகிறது.
மூணாறில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் பழநி தண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் பூஜை உள்ளிட்ட ஐதீகங்கள் முறைப்படி கடை பிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் கார்த்திகை, தைப்பூசம் உள்ளிட்ட திருவிழாக்கள் இரண்டு ஆண்டுகள் முடங்கிய நிலையில் கோயில் ரோட்டில் உள்ள பாலத்தின் கட்டுமான பணிகளால் கடந்தாண்டு கார்த்திகை திருவிழா விமர்சியாக நடத்த இயலவில்லை. இந்நிலையில் தடைகள் அனைத்தும் நீங்கியதால் இந்தாண்டு திருக்கார்த்திகை திருவிழாவை வெகு சிறப்பாக நடத்துவதற்கு இந்து தேவஸ்தானம் முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கார்த்திகை திருவிழா டிச.6ல் நடப்பதால் கோயிலில் வர்ணம் பூசப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.