பதிவு செய்த நாள்
26
நவ
2022
12:11
சபரிமலையில் நேற்று மதியம் களபபவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நடைப்பயிற்சியை தவிர்க்க போலீஸ் வேண்டுகோள்: சபரிமலை சீசன் துவங்கி உள்ளது. வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், தேனி பைபாஸ் சாலைகளில் காலை, மாலை நேரங்களில் நடைப் பயிற்சி செய்வதை தவிர்க்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சபரிமலை மண்டல பூஜை சீசன் துவங்கி உள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு கார்த்திகை முதல் நாள் விரதம் துவங்கிய அன்று முதல் சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திர மாநில பக்தர்களும் வாகனங்களில் செல்கின்றனர். பொதுவாக இதுவரை கடந்த காலங்களில் சபரிமலை மண்டல பூஜை சீசனில் மார்கழி மாதம் 15 க்கு பின்பே பக்தர்கள் செல்ல துவங்குவார்கள். ஆனால் இந்தாண்டு கார்த்திகை முதல் நாளிலிருந்து அதிக வாகனங்கள் செல்கின்றன. இதனால் தேனி மாவட்ட பைபாஸ் சாலைகளில் இரவும் பகலும் போக்குவரத்து அதிகமாக உள்ளது. சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் பைபாஸ் சாலைகளில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் ஆண்களும், பெண்களும் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். சபரிமலை சீசன் முடிவடையும் வரையில் பைபாஸ் சாலைகளில் நடைப்பயிற்சி செய்வதை தவிர்க்குமாறு சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.