தீர்க்க ரோம மகரிஷி தலைமையில் 12 ஆண்டுகள் சத்திரவேள்வி செய்ய முனிவர்கள் பிரம்மாவின் உதவியை நாடினர். அனைவரையும் ஒரு விமானத்தில் ஏற்றி, இதில் பூலோகத்தைச் சுற்றி வாருங்கள். விமானத்தின் சக்கரம் எங்கு விழுகிறதோ அதுவே வேள்வி நடத்த தகுதியான இடம், என்றார். அதன்படி ரிஷிகள் சென்றபோது, விமானச் சக்கரம் ஒரு வனப்பகுதியில் விழுந்தது. அதுவே நைமிசாரண்யம். நேமி என்றால் சக்கரம். ஆரண்யம் என்றால் காடு. இங்கு ரிஷிகள் செய்த சத்திரவேள்வியின் பயனாக விஷ்ணு யாக குண்டத்தில் தோன்றி மோட்சகதி வழங்கினார். மேற்குவங்கத்தில் உள்ள இத்தலத்தில் வனப்பகுதியே விஷ்ணுவாக இருப்பதாக ஐதீகம்.